திட்டமிட்டப்படி நாளை மறுநாள் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு செவி சாய்க்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திட்டமிட்டப்படி நாளை மறுநாள் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், தமிழக அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள், 21 மாத நிலுவை தொகை, சத்துணவு அங்கன்வாடி ஊராட்சி செயலாளர், கிராம உதவியாளர்களுக்கான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை. இதனால் மே 8-ம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக உறுதிபட குறிப்பிட்டார்.
நாளை மறுநாள் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ள கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார். போராட்டத்தை நடத்த கூடாது என்பதற்காக அரசு தங்களது வாகனங்களை தடை செய்வதாகவும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தடையை மீறி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.