10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் மனுவில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகளை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட தடை விதிக்க கோரியுள்ளார். பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. ஆனால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரையும் இழந்து விடுகிறார்கள்.
எனவே பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு பதில் பெற்றோர் முன்னிலையில் உரிய பள்ளிகளிலோ அல்லது தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமோ நேரடியாக அளிக்கலாம். பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தை கூட்டி, மாணவர்களின் தேர்வு முடிவுகளை வழங்கினால், தற்கொலை முயற்சி தடுக்கப்படும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த முறைகளை பின்பற்றினால் மாணவர்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்க முடியும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். தனத கோரிக்கை பற்றி அரசுக்கு மனு அளித்ததாகவும் ஆனால் அரசோ உரிய பதில் ஏதும் அளிக்கவில்லை என்றும் மனுவில் செந்தில்குமார் கூறியுள்ளார். செந்தில்குமாரின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை 4 வாரங்களில் பதிலளிக்க கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.