பொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 2 May 2018

பொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி?


அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப முறை இந்தாண்டு
முதல், ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, நாளை (மே 3) தொடங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 567 கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்புகளில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் கவுன்சிலிங்

ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுவதால், அதில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும். அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.

மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்பப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

உதவி மையங்கள்

ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொகையை, விண்ணப்பப் பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.நேரடி கவுன்சிலிங்விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், கடந்தாண்டு நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங், மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும். இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய
https://tnea.ac.in/tneaonline18/index.php

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot