சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : முன்னாள் நீதிபதி தலைமையில் குழு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 9 May 2018

சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

அரசு சட்டக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, என்.பால்வசந்தகுமார் தலைமையில், நிபுணர் குழு நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
முழு நேர ஆசிரியர்களாக, அரசு சட்டக் கல்லுாரிகளில்,186 பேரை நியமிப்பதற்கான அரசாணையை, 2017ல், அரசு பிறப்பித்தது. இந்த உதவி பேராசிரியர்கள் தேர்வு, முறையாக நடக்காது என கருதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்று, அறிவிப்பாணை வெளியிட, நீதிபதிகள், கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.இதையடுத்து, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய, நிபுணர் குழுவை நியமிப்பது என, அரசு முடிவு எடுத்தது. அதைத்தொடர்ந்து, விண்ணப்பங்களை வரவேற்று, பரிசீலிக்கும் பணிகளுக்கு, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நிபுணர் குழுவின் தலைவராக செயல்பட, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, என்.பால்வசந்தகுமாரின் ஒப்புதலை, அரசு கோரியது. அதற்கு, நீதிபதி பால்வசந்தகுமார் ஒப்புதல் அளித்தார்.ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியின் தலைமையில், சட்டத்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் சட்டப் படிப்புக்கான இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைப்பது என, அரசு முடிவெடுத்தது. இது குறித்த தகவல், நீதிபதிகள், கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச்சில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு நியமித்துள்ள நிபுணர்கள் குழுவுக்கு, இந்த நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கிறது. குழுவில், தமிழகம் அல்லது இதர மாநிலங்களை சேர்ந்த, புகழ்பெற்ற கல்வியாளர்களை, நிபுணர் குழுவின் தலைவரின் விருப்பப்படி, கூடுதலாக நியமித்துக் கொள்ளலாம். உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடவடிக்கைகளை, நிபுணர் குழு கண்காணிக்க வேண்டும்.

கேள்வித்தாள்கள் தயாரிக்கும் முறை, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவதை இறுதி செய்வது என, தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். எந்த பிரச்னையானாலும், குழுவின் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது. நிபுணர் குழு நியமனம் தொடர்பாக, தனியாக அரசாணை பிறப்பிப்பது குறித்த நடவடிக்கைகளை, அரசு துவங்கலாம். தேவைப்பட்டால், மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்க ஏதுவாக, தேர்வு நடவடிக்கை குறித்த விபரங்களை, ஜூலை முதல் வாரத்தில், நிபுணர் குழு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot