'நீட்' தேர்வு தமிழ் வினாத்தாளில், மொழி பெயர்ப்பில் தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 6ல், நாடு முழுவதும் நடந்தது.
நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.இந்த தேர்வில், தமிழ்வழி வினாத்தாளில், ஆங்கிலத்தில் இருந்த கேள்விகளை, தமிழில் மொழி பெயர்த்ததில், பிழைகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இது குறித்து, சென்னையைச் சேர்ந்த, 'டெக் 4 ஆல்' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த, ராம்பிரகாஷ், ''தமிழ் மொழி பெயர்ப்பில், 49 இடங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வருங்காலத்தில், இந்த தவறுகள் ஏற்படாமல், தமிழகத்தை சேர்ந்த அல்லது தமிழ் நன்றாக தெரிந்தவர்களை, வினாத்தாள் தயாரிப்பில் இணைத்து கொள்ள வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.