SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 8 May 2018

SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?

நம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்வதற்கு இது உதவும்.
நம்முடைய வங்கிக் கணக்கில் நம்முடைய அனுமதி இல்லாமல் வேறு யாராவது பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அதனை உடனடியாக அறிந்து கொள்வதற்கும் இது உதவும். இந்திய ஸ்டேட் வங்கியில் (SBI) உள்ள உங்களது சேமிப்புக் கணக்குடன் உங்களுடைய மொபைல் எண்ணை இதுவரை இணைக்கவில்லையா? கவலையை விடுங்கள் எப்படி இணைப்பது என்பதைத் தெரிந்து கொள்வோம்.


முதல்முறையாகப் பதிவு செய்தல்
உங்கள் வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வங்கிக் கிளை அல்லது அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
 

ஏடிஎம் மையத்தின் மூலமாக எவ்வாறு பதிவு செய்வது என்பதைப் படிப்படியாகக் காண்போம்.


படி 1 : உங்களுடைய அட்டையை நுழைத்து, மெனு பட்டியலில் உள்ள ‘Registration' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்
படி 2 : உங்களுடைய ரகசியக் குறியீட்டு எண்ணை (PIN) உள்ளீடு செய்யவும்
படி 3 : மொபைல் எண்ணைப் பதிவு செய்வதற்கான பகுதியைத் (Mobile Number Registration Option) தேர்ந்தெடுக்கவும்.
படி 4 : இப்பொழுது நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். எண்ணை மிகச் சரியாகப் பதிவு செய்ததை உறுதி செய்த பின்பு ‘Correct' என்னும் பகுதியை அழுத்தவும்.
படி 5 : முதலில் பதிவு செய்த மொபைல் எண்ணை மறுபடியும் பதிவு செய்து பிறகு ‘Correct' என்னும் பகுதியை அழுத்தவும். இந்த ஐந்து
படிநிலைகளையும் முறையாகச் செய்தவுடன், : 'Thank you for registering your mobile number with us'. என்னும் எழுத்துக்கள் ஏடிஎம் இயந்திரத்
திரையில் தோன்றும். மூன்று நாட்களில் வங்கியின் தொடர்பு
மையத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.
படி 6 : குறுஞ்செய்தியின் வழியாக ஒரு குறிப்பென் உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
SBI தொடர்பு மையத்தின் விதிமுறைகளின்படி மூன்று நாட்களுக்குள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உங்களுடைய வங்கிக் கணக்கின் பாதுகாப்புக்காக, உங்களுடன் தொடர்பு கொள்ளும் நபரிடம் குறிப்பு எண்ணைக் (Reference Number) கூறச் சொல்லவும். அவர் சொல்லுகின்ற எண்ணும் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பு எண்ணும் பொருந்தியிருந்தால் மேற்கொண்டு உங்களுடைய உரையாடலைத் தொடரவும்.
உங்களுடைய விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டு சரிபார்த்த பின்பு உங்களுடைய மொபைல் எண் உங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வங்கியிலிருந்து உங்களுக்குக் குறுந்தகவல் அனுப்பப்படும்.

ஏற்கனவே பதிவு செய்த எண்ணை மாற்றுதல்
வங்கிக் கிளைக்குச் செல்லாமல், ஏற்கனவே பதிவு செய்த எண்ணிற்குப் பதிலாகப் புதிய எண்ணைப் பதிவு செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1)இன்டெர்நெட் பேங்கிங் 2) SBI ஏடிஎம் மையம் 3) மொபைல் பேங்கிங்
ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றின் வழியாக உங்களுடைய மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குக்கு உரிய டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.
 

இன்டெர்நெட் பேங்கிங் மூலமாக எண்ணை மாற்றுதல்
உங்களுடைய வங்கிக் கணக்கை இன்டர்நெட் மூலமாக இயக்கிக் கொள்ள நீங்கள் முன் கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் இந்த இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்யுங்கள்.
இன்டர்நெட் பேங்கிக் வசதியைப் பெற்றவர்கள், தங்களுடைய புதிய மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.
படி 1 : முதலில் www.onlinesbi.com என்னும் இணையதளப் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுடைய அடையாளப் பெயரையும் கடவுச் சொல்லையும் பதிவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கில் உள் நுழையவும்.
படி 2 : 'My Account & Profile' என்னும் பகுதியை கிளிக் செய்து, 'Profile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.
படி 3 : 'Profile' பகுதியில் உள்ள 'personal details/Mobile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.
படி 4 : உங்களுடைய கடவுச்சொல்லை (Profile Password) பதிவு செய்து உள்நுழைய வேண்டும். இப்பொழுது, உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்களுடைய வங்கிக் கணக்கோடு பதிவு செய்திருந்த மொபைல் எண் ஆகியவை திரையில் தோன்றும்.
படி 5 : இப்பொழுது, 'Change Mobile number -Domestic only' (Through OTP/ATM/Contact Centre) என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
படி 6 : 'Personal Details -mobile number update' என்னும் புதிய திரை தோன்றும். இப்பகுதியில் 'create request', 'cancel request' மற்றும் 'status' என்னும் மூன்று தேர்வு நிலைகள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.
படி 7 : இங்கு நாம், 'create request' என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதியில்தான் நாம் மாற்ற விரும்பும் புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த, மீண்டும் அதே எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, 'Submit' பகுதியை கிளிக் செய்யவும்.
படி 8 : எண்ணைப் பதிவு செய்தவுடன் திரையில் உடனடித் தகவல் (pop up Message) ஒன்று தோன்றும். அங்கு உங்களுடைய மொபைல் எண்ணை உறுதி செய்தவுடன் OK பகுதியை கிளிக் செய்யவும்.
படி 9 : இப்பொழுது நீங்கள், மாற்றப்பட்ட மொபைல் எண்ணை அங்கீகரிக்க வேண்டும். இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1) உங்களுடைய பழயை மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல் 2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA) 3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல். ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
படி 10 : மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் டெபிட் கார்டு வைத்திருக்கும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து ‘OK' கொடுக்கவும்.
படி 11 : உங்களுடைய டெபிட் கார்டுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு எண் திரையில் தோன்றும். 'active/inactive' எனத் தோன்றும் பகுதியில் 'Active' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 12 : டெபிட் கார்டு எண், செயல்பாட்டுக்கு வந்த தேதி அல்லது காலாவதியாகும் தேதி, அட்டை உரிமையாளரின் பெயர், ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்த பிறகு சிறு அடைப்புப் பெட்டிக்குள் தோன்றும் கேரக்டர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்த பின்பு ‘Submit' பகுதியை கிளிக் செய்யவும்.
படி 13 : தகவல்களைச் சரிபார்த்த பின்பு 'pay' பகுதியை கிளிக் செய்யவும்.
உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்த பிறகு, 1) உங்களுடைய பழைய 6 மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல் 2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA) 3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல் ஆகிய மூன்றில் நீங்கள் எந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தீர்களோ அதற்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.

மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட OTP மூலமாக மாற்றம் செய்ய
நீங்கள் இந்த வாய்ப்பைப் தோ்ந்தெடுத்திருந்தால், நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் எண் மாற்றத்தை நிறைவு செய்யலாம்.
1) ஒரு முறை பயன்படுத்த கூடிய ரகசிய எண் உங்களுடைய பழயை மற்றும் புது மொபைல் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
2) ரகசிய எண் கிடைக்கப் பெற்ற நான்கு மணி நேரத்துக்குள், பழைய மற்றும் புதிய மொபைல் எண்களில் இருந்து பின்வரும் வகையில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். ACTIVATE <8 digit OTP value>, <13 digit reference number> to 567676
3) நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், உங்கள் வங்கிக் கணக்கோடு புதிய மொபைல் எண் இணைக்கப்படும். இது பற்றிய தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
 

தகவல் தொடர்பு மையம் மூலமாக மாற்றம் செய்ய
உங்களுடைய பழைய மொபைல் எண்ணை பயன்படுத்த இயலாத சூழலில் நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தால்,
1) புதிய மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வேண்டுகோளைப் பதிவு செய்தமைக்கான குறிப்பு எண் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
2) அடுத்த மூன்று நாட்களுக்குள் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு வங்கியிடமிருந்து அழைப்பு வரும். உங்களுடைய வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால், உங்களை அழைத்த நபரிடமிருந்து குறிப்பு எண்ணைக் கேட்டு அதனை உங்களுக்கு வந்த குறிப்பு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தகவல்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், உங்களுடைய புதிய மொபைல் எண் உங்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எண் மாற்றப்பட்ட தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
 

இணைய வழி பேங்கிங் தகவல் வழி ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்ய
இந்த வசதியின் மூலமாக உங்கள் எண்ணை மாற்ற நினைத்தால்
1) உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான குறிப்பு எண் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
2) அருகில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்குச் சென்று, கார்டை உள் நுழைத்துத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.
3) ‘Others' என்கின்ற பகுதியில் உள் நுழைந்து, 'Internet Banking Approval Request' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
4) உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்த குறிப்பு எண்ணைப் பதிவு செய்யவும்
5) உங்களுடைய எண்ணைச் சரியாகப் பதிவு செய்தவுடன் உங்கள் வங்கிக் கணக்குடன் புதிய மொபைல் எண் இணைக்கப்பட்டு விடும். மொபைல் எண் மாற்றம் செய்யப்பட்ட தகவல் உங்கயுளுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
 

SBI ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்ய
உங்களுடைய மொபைல் எண்ணை ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்யப் பின்வரும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1) அருகில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்தில் உங்கள் உங்கள் கார்டைச் செலுத்தி உள்நுழையவும்
2) சேவைப் பட்டியலிலிருந்து 'Registration' என்னும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்
3) உங்களுடைய ஏடிஎம் அட்டையின் ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து, 'Update your mobile number' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
4) உங்களுடைய பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்து பிறகு அதனை உறுதிப்படுத்தவும். அதே போன்று உங்களுடைய புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்து பிறகு அதனை உறுதிப்படுத்தவும்.
5) ஒரு முறை பயன்பாட்டுக்கு உரிய (OTP) எண் உங்களுடைய பழைய மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
SBI அழைப்பு மையத்தின் நடைமுறைப்படி, நீங்கள் பழைய மற்றும் புதிய மொபைல் எண்கள் இரண்டையும் வைத்திருந்தால் இரண்டிலிருந்தும் OTP எண் மற்றும் குறிப்பு எண் ஆகியவற்றை 567676 என்னும் எண்ணிற்கு நான்கு மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
உங்களிடம் பழைய மொபைல் எண் இல்லையென்றால், மேற்கண்ட தகவலை புதிய மொபைல் எண்ணிலிருந்து மட்டும் அனுப்பினால் போதுமானது. அடுத்த மூன்று நாட்களுக்குள் அழைப்பு மையத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால், உங்களை அழைத்த நபரிடமிருந்து குறிப்பு எண்ணைக் கேட்டு அதனை உங்களுக்கு வந்த குறிப்பு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தகவல்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், உங்களுடைய புதிய மொபைல் எண் உங்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எண் மாற்றப்பட்ட தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

   மொபைல் பேங்கிங் மூலமாக மாற்றம் செய்ய
மொபைல் பேங்கிங் மூலமாக எண்ணை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் மொபைல் பேங்கிங் வசதியைப் பெற பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் 1800 - 11- 22- 11 அல்லது 1800 - 425 - 3800 என்னும் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கு முன்னால், ஏடிஎம் அட்டை மற்றும் வங்கிக் கணக்குக் குறித்த தகவல்களைத் தயாராக வைத்திருக்கவேண்டும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot