அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங், வரும், 11ம் தேதி துவங்குகிறது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கவுன்சிலிங், மே மாதம் நடத்தப்படும்.
இந்த ஆண்டு, 15 நாட்கள் தாமதமாக, வரும், 11ல், துவங்க உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 11லும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜூன், 12ம் தேதியும், கவுன்சிலிங் துவங்கும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த கவுன்சிலிங், ஜூன், 21 வரை நடத்தப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங்கிற்கு முன்னும், பின்னும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ள, கல்வித்துறை இயக்குனர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணையில், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.