ஜிப்மர் நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 491 பேர் எழுதினர். புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 150; காரைக்கால் ஜிப்மர் கிளையில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
இவற்றில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, நேற்று காலை, 10.00 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல், 3.00 மணி முதல் 5.30 மணி வரையும், இரண்டு வேளையாக நடந்தது. இத்தேர்வு, நாட்டில் உள்ள, 130 நகரங்களில், 291 மையங்களில் நடந்தது. ஜிப்மர் நுழைவுத் தேர்வை, காலையில் எழுத, ஒரு லட்சத்து, ௧,321 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில், 81 ஆயிரத்து 886 பேர், தேர்வு எழுதினர். மதியம் நுழைவுத் தேர்வுக்கு, 96 ஆயிரத்து, 430 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களில், 72 ஆயிரத்து, 605 பேர் எழுதினர். காலையில், 80.81 சதவீதம், மாலையில், 75.29 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும், ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து, 751 மாணவர்கள், ஜிப்மர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 491 பேர் தேர்வு எழுதினர். 78.12 சதவீதம் பேர், தேர்வு எழுதியுள்ளனர்.
புதுச்சேரியில் ஜிப்மர் நுழைவுத் தேர்வு, கிறிஸ்ட் பொறியியல் கல்லுாரி உள்பட, ஏழு மையங்களில் நடந்தது. மொபைல்போன், கால்குலேட்டர், கை கடிகாரம், இயர் போன் மற்றும் மின்னணு கருவிகள் எதையும் தேர்வு அறைக்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை.தேர்வு முடிவுகள், ஜூன், 20ம் தேதிக்குள், அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் இறுதி வாரத்திலும், வகுப்புகள், ஜூலை, 4ம் தேதியிலிருந்து துவங்க உள்ளது.