தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் கூறியதாவது:
பல ஆண்டு போராட்டத்தின் காரணமாக நிர்வாக வசதிக்காக பள்ளிக் கல்வித்துறையில் இருந்து தொடக்கக் கல்வித்துறை தனியாக பிரிக்கப்பட்டது.
தற்போது வட்டார, மாவட்ட அளவில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை பள்ளிக் கல்வித்துறையுடன் மீண்டும் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யவலியுறுத்தி 8ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.