கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றை கொண்ட வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகளில் தங்களின் வசதிக்கு ஏற்ப ஆண்டு தோறும் கல்வி கட்டணத்தை உயர்த்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனை சரி செய்யும் விதமாக நாடு முழுவதும் உள்ள தனியார் சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ என்ற அனைத்து பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தையும் ஒழுங்குப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒழுங்கு முறை குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கல்விக்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்விக்கட்டணம் எண்ண என்பதை நிர்ணயிக்கும். 8 விழுக்காட்டிற்கு மேல் கல்விக்கட்டணம் உயர்த்தப்படக்கூடாது, அப்படி உயர்த்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெறுகின்றன.
ஆண்டுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் பள்ளிகள் இந்த புதிய சட்டத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டும், கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச அரசு இதுபோன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. இது அந்த மாநில மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இதை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி கட்டணத்தை ஒழுங்குப்படுத்த தமிழ்நாடு, மகாராஷ்ரா, குஜராத் மாநிலங்களில் இதுபோன்ற குழு ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.