அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 42 உதவிமையங்களில், கல்லுாரிகளின் இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக். படிப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,ஜூலையில் நடக்கிறது.இந்த ஆண்டு முதல், 'ஆன்லைன் கவுன்சிலிங்' அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று முன்தினம் துவங்கியது.தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. அண்ணா பல்கலையின் அதிகாரிகள், ஒவ்வொரு உதவி மையங்களிலும் முகாமிட்டு, சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர்.தினமும், 25 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு, அவர்களின் அசல் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.இதனால், உதவி மையங்களில், மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அதை பயன்படுத்தி, சில தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்களின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் ஏஜன்ட்களை அனுப்பி, மாணவர்களை, தங்கள் கல்லுாரிகளில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. சில இடங்களில், இடைத்தரகர்கள், கல்லுாரிகள் குறித்த பிரசுரங்களை கொடுத்து, மாணவர் சேர்க்கைக்கு வலை விரிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இதையடுத்து, உதவி மைய வளாகங்களுக்கு உள்ளேயும், அதன் நுழைவு வாயில் பகுதிகளிலும், கல்லுாரிகளின் இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை வளாகம் உட்பட, அனைத்து உதவி மைய வளாகங்களிலும், இடைத்தரகர்களை கண்டால், அவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், 8ம் தேதி துவங்கின. சென்னை அண்ணா பல்கலையில், 17ம் தேதி வரையிலும், மற்ற உதவி மையங்களில், 14 வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, உதவி மையத்தில் மட்டும், நாளையுடன் சான்றிதழ் சரிபார்ப்பு முடிகிறது. நீலகிரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில், விண்ணப்பதாரர்கள் உள்ளதால், மூன்று நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, அந்த மாவட்டத்தில் மட்டும், நாளை சான்றிதழ் சரிபார்ப்பு முடிகிறது.