மதுரையில் கடந்தாண்டு ஆர்.டி.இ., (இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்) மாணவர் சேர்க்கைக்கான அரசு நிதி இன்னும் கிடைக்காததால் இந்தாண்டும் எவ்வாறு சேர்க்கை நடத்துவது என மெட்ரிக் பள்ளிகள் அதிருப்தியில் உள்ளன.
இதனால் 'கட்டணத்தை முதலில் செலுத்துங்கள்; அரசு தந்ததும் திரும்ப பெறலாம்' என பெற்றோருக்கு நிபந்தனை விதித்துள்ளன.மாவட்டத்தில் இந்தாண்டு 302 தொடக்க மற்றும் நர்சரி, 157 மெட்ரிக் பள்ளிகளில் ஆர்.டி.இ.,யின் கீழ் 93 சதவீதம் மாணவர் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான கல்வி கட்டணங்கள் மட்டும் அரசு சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். மாநில அளவில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை இத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், 'ஆர்.டி.இ., சேர்க்கை என்றாலும் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு நிதி பள்ளிக்கு கிடைத்தவுடன் கட்டணம் திருப்பி கொடுப்போம்,' என பள்ளிகள் நிபந்தனை விதிப்பதாக பெற்றோர் புகார் கூறுகின்றனர்.பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது:இத்திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் (டியூஷன் பீஸ்) மட்டும்தான் அரசு வழங்குகிறது. சீருடை உட்பட பிற கட்டணங்களை செலுத்த பெற்றோர் மறுக்கின்றனர்.
மாவட்டத்தில் கடந்தாண்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கப்பட்டும் அதற்கான கல்வி கட்டணங்களை அரசு இன்னும் வழங்கவில்லை.இதற்கிடையே இந்தாண்டும் மாணவர்களை சேர்க்க வேண்டியுள்ளது. இது பள்ளிகளுக்கு நிர்வாக ரீதியாக சுமையாக உள்ளது, என்றனர்.