இந்த சலுகையை பயனர்கள் தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும். ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பயனர்களுக்கும் இலவச டேட்டா கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என தெரிகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில், இன்று வரை ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகைகளால் போட்டி நிறுவனங்கள் வெடவெடத்து போயுள்ளன. இதனால் ஜியோ சலுகைக்கு போட்டியாக போட்டி நிறுவனங்களும்புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் சேவையை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் என்ற பெயரில் பயனர்களுக்கு இலவச சேவைகளை வழங்கியது. அந்த வகையில் பயனர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 8 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில், ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு மேலும் 8 ஜி.பி கூடுதல் இலவச டேட்டா வழங்கி உள்ளது.
இந்த கூடுதல் டேட்டா நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் இலவச டேட்டா, பயனர்கள் கணக்கில் தானாக சேர்க்கப்படுகிறது.
இந்த சலுகையை பயனர்கள் தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும். ஜியோ பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைத்து பயனர்களுக்கும் இலவச டேட்டா கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என தெரிகிறது. எனினும், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் டேட்டா நவம்பர் மாதத்திலேயே அனைவருக்கும் வழங்கப்படும் .
Pg trb history material available 9944379945
ReplyDeletePg TRB eppa announce pannuvanga
ReplyDelete