2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவில்லை? -அரசு துறைகளில், 3,030 பணியிடங்கள் காலி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday, 29 December 2018

2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவில்லை? -அரசு துறைகளில், 3,030 பணியிடங்கள் காலி



தமிழக பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில்,போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேர்வுகளில், அதிக மதிப்பெண்பெறுபவர்கள்,தர வரிசையில் இடம் பெறுவர். அவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, உரிய நியமனம் வழங்கப்படும்.ஆனால், டி.ஆர்.பி.,யின் தேர்வுகளில், சில ஆண்டுகளாக, முறைகேடுகளும், விதிமீறல்களும் அதிகரித்துள்ளன. எனவே, டி.ஆர்.பி.,யின் பணி நியமனம் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.

குறிப்பாக, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆகஸ்டில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பட்டியலில், சிலருக்கு மட்டும் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது.இந்த முறைகேட்டை, தேர்வு எழுதியோரே அம்பலப்படுத்தினர். இது குறித்து, டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலர் உமா அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், டி.ஆர்.பி.,யில் பணியாற்றியவர்கள் உட்பட, எட்டுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.முறைகேடு காரணமாக, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, ஆசிரியர்தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்விலும், அதிக மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்தும், விசாரணை நடந்து வருகிறது.இதன்பின், டி.ஆர்.பி., நடத்திய, அரசு பள்ளி சிறப்பாசிரியர் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், வழக்குகள் மற்றும் முறைகேடுகளால், டி.ஆர்.பி., யின் மொத்த செயல்பாடுகளும் முடங்கியுள்ளன.

நடப்பு ஆண்டில்அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், டி.ஆர்.பி.,யால் நடத்த முடியவில்லை. இன்னும் ஒரு நாளில், இந்த ஆண்டே முடிய உள்ளது. அதற்குள் அறிவித்த தேர்வுகளை நடத்துவது அறவேசாத்தியமல்ல. டி.ஆர்.பி.,முடங்கியதால், அரசுதுறைகளில், 3,030 காலியிடங்கள் நிரப்பப்படாமல், காலியாகவே இருக்கின்றன.

இது குறித்து, 'பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் ஆலோசனை நடத்தி, டி.ஆர்.பி.,யில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.'அரசியல் தலையீடுகள் மற்றும் முறைகேடுகளுக்கு இடமின்றி, தேர்வுகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், டி.ஆர்.பி.,யை கலைத்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி., வழியாக, பணி நியமனங்கள் செய்யலாம்' என, கல்வியாளர்கள்கருதுகின்றனர்.காலாவதியான தேர்வுகள்!வேளாண் பயிற்றுனர் பதவியில், 25 காலியிடங்களுக்கு, ஜூலையிலும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,065 விரிவுரையாளர் பணிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 1,883 இடங்களுக்கு, ஜூனில் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

உதவி தொடக்க கல்வி அதிகாரி பதவியில், 57 இடங்களுக்கு செப்டம்பரிலும், ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு அக்டோபரிலும்நடத்தப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்தது. இந்த தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல், அந்த அறிவிப்பு அட்டவணையே காலாவதியாகியுள்ளது.

11 comments:

  1. intha govt irukiravaraikum ipadithan.. ethuku intha trb..? trb ya kalaithuvidalam..

    ReplyDelete
  2. ஊழலின் உச்சத்தில் டி.ஆர்.பி

    ReplyDelete
  3. முன் எப்போதும் இல்லாத வகையில் கல்வி அமைச்சர் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்காலம் தொடக்கக் கல்வித் துறைக்கு பெரும் சாபக்கேடான காலம் என்றே சொல்லலாம் ஏனெனில் இவர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தினம் ஒரு அறிவிப்பு என்று வருகிறதே தவிர அவை செயல்பாட்டுக்கு வருவதற்கு வருவதற்குள் அடுத்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்துவிடுகிறது ஆகவே முன்னெப்போதும் இல்லாமல் பெரும் சாபக்கேடான நிலைமை தொடக்கப்பள்ளி தொடக்கக்கல்வித்துறையில் நிலவுகிறது 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் மூடப்படுகின்றன அமைச்சர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அருகாமை பள்ளிகளோடு இணைக்கப்படுகின்றன அதாவது இலவசம் என்பதற்கு பதிலாக விலையில்லா என்ற சொல் அதிமுக ஆட்சியில் பயன்படுத்துவதைப் போல் மூடப்படுவது என்ற வார்த்தை இணைக்கப்படுகிறது என லாவகமாக பயன்படுத்தப்படுகிறது இதேபோன்றுதான் 25 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்கள் வெறும் சமையலரோடு மட்டும் இயங்கும் என்று கூறி உதவியாளர் மற்றும் சத்துணவுஅமைப்பாளர் ஆகிய பணியிடங்கள் என 8000 மையங்களில் பணியாற்றும் சுமார் 16 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர் அதுமட்டுமல்ல ஏழை மாணவர்களை இனங்கண்டு மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க இருப்பதாக ஓர் அறிவிப்பு நேற்று வந்துள்ளது ஏற்கனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை என ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் நிலையில் அது போதாதென்று மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் தற்போது மேலும் சுமார் 3500 பேர் தனியார் பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மழலையர் வகுப்பு முறை கொண்டு வருவதாக அறிவித்துவிட்டு மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை கல்வி வரை ஒரே வளாகத்தில் இனைத்து நடத்துவதாக அறிவிப்பு வந்துள்ளது இதன்மூலம் மாநிலம் முழுக்க ஏறக்குறைய ஆயிரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் 2500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒழிக்கப்பட உள்ளன இது போதாதென்று தொடக்கக் கல்வித் பள்ளிக்கல்வித்துறை உடன் இணைத்துசெயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன செங்கோட்டையன் அவர்களின் தலைமையிலான இந்த காலகட்டம் கல்வித் துறையின் சாபக்கேடு மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கனவான கல்வி என்பது எட்டாக்கனியாக எதிர்காலத்தில் மாறும் என்பதில் ஐயம் இல்லை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற பழங்கால முறையை மிகவும் லாவகமாக அதேநேரத்தில் எதிர்ப்பு ஏற்படாவண்ணம் தினம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு கல்வியில் புரட்சி போன்ற மாயையை உருவாக்கி கற்கால்த்திற்குகொண்டு செல்லும் நிலையை இந்த அரசு கையாண்டுள்ளதை சமூகம் பார்த்துக் கொண்டு உள்ளது என்ன செய்வது கையறுநிலையில் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் உள்ளனர்.

    ReplyDelete
  4. trb board sleeping long years

    ReplyDelete
  5. itharkellam amaicharey kaaranam.... avarin. paarvai'n kizh thaan yellam nadakkuthu... so full response minister thaan.....

    ReplyDelete
  6. மக்கள் வரி படத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு உயர் கல்வி வட்டம் மற்றும் trb நிர்வாக அதிகாரி அனைவரும் பொய் பேசுவது,பொய்யா ஆண்டு திட்டங்களை அறிவிபது போன்ற நிகழ்வுகள் லட்சக்கணக்கான உயர் கல்வி பயின்ற நபர்கள் வாழ்வை சீரழிவு போன்ற செயல்கள் ஆகும் இந்த பாதிப்புக்கு பொறுப்பு trb யும் உயர் கல்வி வட்டமும் ஆகும் நீங்களே ஊழலுக்கு காரணமாக இருந்துவிட்டு பல்கலை வேலை வாய்ப்பயும் நிறுத்தி விட்டு பல லட்சக்கணக்கான உயர் கல்வி பயின்றவரின் வாழ்வை கேள்வி குறி யாக்கியது இது மிகவும் கண்டிக்க தக்கது. இது போன்ற சாதனையை செய்த அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Correct sir. இந்த அரசை தூக்கி எரியுங்கள்.

      Delete
  7. Sengottaiyan is very very waste next time deposit Kota kidaikathu

    ReplyDelete
  8. டெட் பாடத்திட்டம் (6-8)வினா(9-12)இது எப்படி சரியான தேர்வு ஆகும்

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot