25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட உத்தரவு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday, 23 December 2018

25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட உத்தரவு!25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூட சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வரும் 27-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 43,205 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 90,000-க் கும் மேற்பட்ட சத்துணவு அமைப் பாளர்கள், சமையலர்கள், உதவியாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.51 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்சத்துணவால் பயன டைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூகநலத் துறை ஆணையர் வே.அமுத வல்லி அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:

25 மாணவ, மாணவிகளுக்கும் குறை வான எண்ணிக்கையில் பயனடைந்து வரும் சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அந்த மையங்களில் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து பரிமாற வேண்டும்.அவ்வாறு ஏற்பாடு செய்யும் பட்சத்தில் அம்மையங்களில் ஒரு சமையல் உதவியாளரை மட்டும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அந்த மையங்களில் சத்துணவு அமைப் பாளர் பணியாற்றி வந்தால் சத் துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ள மையங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்.மலைப் பகுதிகளில் 25 பயனாளி களுக்கு குறைவான பயனாளிகளு டன் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் ஒரே ஒரு சமையல் காரர் மட்டும் தொடர்ந்து பணியாற் றிட அனுமதிக்க வேண்டும். இப்பணி களை வரும் 28-ம் தேதிக்குள் முடித்து அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8,000 மையங்கள்

இதைத் தொடர்ந்து, 25 மாணவ, மாணவிகளுக்கு குறைவான எண் ணிக்கை உள்ள மையங்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி யது. கணக்கெடுப்பில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 8,000 மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த மையங்களை மூடுவதற்கான பணிகளில் சமூக நலத்துறை அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் பே.பேயத் தேவன்கூறியிருப்பதாவது:

சத்துணவு மையங்களை மூடும் உத்தரவால் பணியாளர்கள் உணவை சமைத்து தலையில் சுமந்து வர வேண்டிய சூழல் ஏற்படும். சில இடங்களில் ஒரு மையத்துக்கும் இன் னொரு மையத்துக்கும் இடையே 3 கிமீ இடைவெளி இருக்கிறது. இவ்வாறு, இருக்கும்போது உணவை எப்படி கொண்டு வர முடியும்?

27-ம் தேதி ஆர்ப்பாட்டம்

8,000 மையங்களை மூடும் சமூக நலத் துறையின் முடிவால் மாணவர்களும், சத்துணவு ஊழி யர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த உத்தரவை எதிர்த்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழு வதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot