பிளஸ்-2 வினாத்தாள் 'அவுட்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 19 December 2018

பிளஸ்-2 வினாத்தாள் 'அவுட்'பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு உயிரியல் வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது குறித்து கல்வித்துறை விசாரிக்கிறது.தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது.

பிளஸ்-2மாணவர்களுக்கு நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன. இந்நிலையில் உயிரியல் பாட வினாத்தாள் நேற்று முன்தினமே இணையதளத்தில் வெளியானது தெரிந்தது.

இதை திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் நேற்று கண்டுபிடித்தார்.நேற்று தேர்வு நடந்து கொண்டு இருக்கும்போது, 'ேஷர் சாட்' என்னும் 'ஆப்'பில்உயிரியல் ஆங்கில வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இத்தேர்வு ரத்தாகி மறுதேர்வு நடத்தப்படலாம் என்ற தகவலும் பரவுகிறது.கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'கடந்த 10 நாட்களுக்கு இணையதளத்தில் உயிரியல் வினாத்தாள் வெளியாகிவிட்டது.

புதிதாக வினாத்தாள் தயாரிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இணையத்தில் வெளியான விஷயம் மாணவர்களுக்கு தெரியாததால், தேர்வை நடத்தி விடுவது என்று முடிவெடுத்தனர். அதன்படியே தேர்வும் முடிந்து விட்டது. இப்போதுதான் வினாத்தாள் வெளியான விஷயம் பரவிவருகிறது. இதற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது'' என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot