பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 15 December 2018

பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது


ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3894 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் கடந்த 1.8.2017 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட்டதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களை சரண் செய்து இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க அந்தந்த மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் ஆசிரியர்களின்றி உள்ள உபரி காலி பணியிடங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் ஒப்படைக்கப்பட்டு பள்ளி கல்வி  இயக்குநரின் பொது தொகுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டு பள்ளி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு, நகராட்சி,உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களின் உபரி காலி பணியிடங்கள் 3894 என பட்டியலிடப்பட்டு சரண் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் 686, ஆங்கிலம்  334, கணிதம் 676, அறிவியல் 1177, சமூக அறிவில் 690, இதர பாட பிரிவுகள் 66 ஆசிரியர் பணியிடங்களும் உபரியாகியுள்ளன. மேலும் இடைநிலை ஆசிரியர் பிரிவில் 265 ஆசிரியர்கள் உபரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 465,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 439 பணியிடங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த காலி பணியிடங்களை இனி வரும் காலங்களில் பள்ளி  கல்வித்துறை சார்பில் நடைபெறுகின்ற ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வின்போது காலி பணியிடங்களாக காண்பிக்ககூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரால் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பராமரிக்கப்படுகின்ற அளவை பதிவேட்டில் (ஸ்கேல்ரெஜிஸ்டர்) திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று  பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சரண்டர் செய்யப்பட்ட பணியிடங்களை புதியதாக நியமிக்கப்படும் கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பயன்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 800க்கும்  மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார அடிப்படையில் இந்த பணியிடங்கள் குறைவு  ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

3 comments:

  1. அதேப்போன்று அரசாங்க உதவி பெறும் பள்ளியான Danish mission பள்ளிகளில் நிறைய முறைகேடாக நியமிக்கப்பட்ட உபரி ஆசிரியர்கள் நிறைய உள்ளனர், இந்த பள்ளிகளின் தற்போதைய நிலைமை மிக மிக மோசமானதாக உள்ளது,மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஒரு வகுப்பில் 5,6 பேர் மட்டுமே உள்ளனர்,ஆனால் அதன் நிர்வாகம் தற்போதும் புதிய ஆசிரியர்களை நியமிக்கிறார்கள் இந்த நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்,எனவே அரசாங்கமானது 2012 க்கு பிறகு ஆசிரியர்களாக நியமிக்பப்பட்டவர்களுக்கு TET ல் தேர்ச்சிப்பெற வேண்டும் என்றும் அவ்வாறு அவர்கள் தேர்ச்சி பெறவில்லையென்றால் அவர்களை நீக்கி விட்டு Tet ல் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணி வழங்கி இந்த Danish mission பள்ளியை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும்.

    ReplyDelete
  2. Ithu Amma posting pottatha?

    ReplyDelete
  3. மாலை வணக்கம்,
    நாங்கள் பல ஆண்டுகளாக கணினி ஆசிரியர் டிர்பி மூலம் வரும் என்ற கோணத்திலும்,வருமையன் சூழலில் வசித்து வருகிறோம், எங்களை ஏன் புரக்கணிக்கிரீர்கள், என்னை போன்று பல்லாயிரகணக்கான கணினி ஆசிரியர் பணிகளுக்க்காக காத்துகொண்டிருக்கிறார்கள் , ஏன் இந்த அரசுக்கு தெரியவில்லையா, அரசு மெத்தனபோக்காகவே செல்கிறது. தமிழகத்தில் 3926 பள்ளிகள் இருந்தும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் நியமித்தாலே போதும் , பல்லாயிரக்கணக்கான கணினி ஆசிர்யர் வீட்டில் அடுப்பு எரியும் , நடுநிலை,மேனிநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஊதியம் குறைந்தது 30,000 - 52000 வரை ஊதியம் வாங்குகிறார்கள், எங்களுக்கும் இந்த அரசு ஒரு வாழ்க்கை கொடுக்குமா? இல்லையெனில் அரசு பள்ளியில் கணினி என்ற பாடத்தை நீக்கி விடுங்கள் , இனி வரும் காலங்களில் கணினி என்ற பாடம் மாணவர்கள் படிக்கவேண்டாம் என்று ஆணை பிறபித்துவிடுங்கள்.

    நன்றி..........

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot