4-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் நீர் அருந்தா உண்ணாவிரதம் : பலரது உடல்நிலை பாதிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 26 December 2018

4-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் நீர் அருந்தா உண்ணாவிரதம் : பலரது உடல்நிலை பாதிப்பு


தண்ணீர் மற்றும் உணவு இன்றி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி  ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-வது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ளனர். பலரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டத்தை தொடர்வதில் ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், தாங்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியத்தை மட்டுமே கேட்பதாகவும் மிகையாக கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தாங்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடுவதால், அரசு தங்களது கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டு கொள்வதாக கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் கூறுகையில் 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கே குழுமியுள்ளதாகவும், ஆனால் இயற்கை உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு மிகுந்த சிரமப்படுவதாகவும் கூறினர். இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில், இடைநிலை ஆசிரியர்களில் இரு வேறு ஊதிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக 31.5.2009க்கு முன்பு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதற்கு அடுத்த நாள் 1.6.2009ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஊதியத்தில் வேறுபாடு ரூ.3170 வருகிறது. இரண்டாவதாக பணி நியமனம் பெற்ற மேற்கண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஒரு கல்வித்தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசுத் தரப்பில் இறுதி முடிவு எடுக்காத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, அவர்களுக்கு உரிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை அளித்தது.

ஆனால் அரசு அதன்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 24ம் தேதி தொடர் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். அரசு உடனடியாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

நேற்று முன்தினம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தததால், சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் முற்றுகையிட்டு  நீர் அருந்தா உண்ணா விரதம் மேற்கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். இருப்பினும், ஆசிரியர்கள் ஸ்டேடியத்துக்குள்ளே நீர் அருந்தா உண்ணா விரதம்  இருக்கின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 comments:

  1. 5years suspend pana arsuku Baku iruka?

    ReplyDelete
  2. Nenga ipadi panrathu tet pass pannavangaluku job ketaikum enpathu doubt thaan....

    ReplyDelete
  3. Appo intha sambalam ungaluku pathatha.....! Adapavigala..

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot