விரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 25 December 2018

விரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி?கேபிள், 'டிவி' மற்றும், டி.டி.எச்., போன்றவற்றில், ஜனவரி முதல், வாடிக்கையாளர்கள், விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும் புதிய நடைமுறை, அமலுக்கு வருகிறது.

ஆனால், விரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி என்ற நடைமுறையை, தனியார் நிறுவனங்களும், கேபிள், 'டிவி' நிர்வாகமும் தெரிவிக்கவில்லை.கேபிள் ஒளிபரப்பில், நாடு முழுவதும், ஜனவரி முதல்,'அலகாட்' என்ற, விரும்பிய சேனல்களை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் முறை, அமலுக்கு வருகிறது. 'டிராய்' என்ற, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இந்த புதியநடைமுறையை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 'டிவி' நிறுவனங்களே, தங்களது சேனல்களின் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.இதையடுத்து, தனியார், 'டிவி' நிறுவனங்கள், தங்களது சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து, விளம்பரப்படுத்தி வருகின்றன. அதனால், ஜனவரி முதல், கேபிள் கட்டணம், தற்போது உள்ளதை விட, ஒன்றரை மடங்கு அதிகமாகலாம். இந்நிலையில், விரும்பிய சேனல்களை, எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து, மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, டி.டி.எச்., வாடிக்கையாளர், சுதாராணிகூறியதாவது:

எங்களதுவீட்டில், 'டாடா ஸ்கை' நிறுவனத்தின், டி.டி.எச்., என்ற, நேரடி ஒளிபரப்பு வசதி உள்ளது. விரைவில், 'ரீசார்ஜ்' செய்ய வேண்டி உள்ளது. வீட்டில், 'டிவி' பார்க்கும் போது, சேனல்களை தேர்வு செய்வது குறித்து, விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.

எவ்வாறு தேர்வு செய்வு என்பது குறித்து, வாடிக்கையாளர் சேவை மையத்தில் கேட்டேன். அப்போது, 'எங்களுக்கும், இதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை; 29ம் தேதிக்கு பின் தெரிய வரும். எனவே, ஏற்கனவே நடப்பில் உள்ள தொகையையே, ரீசார்ஜ் செய்யுங்கள். புதிய மாத கட்டணம் குறித்தும், சேனல்களை தேர்வு செய்வது குறித்தும், நாங்கள் தெரியப்படுத்துவோம்' என்றனர். இவ்வாறு, அவர் கூறினார்

7 comments:

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot