பள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday, 24 December 2018

பள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!!பள்ளி வாரியாக ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடும் பணிகள், விறுவிறுப்பாக நடக்கின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

இதில் தொடக்கப் பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், 35 மாணவர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், இருப்பது அவசியம்.

சேர்க்கை சரிவால், பல ஆண்டுகளாக இருந்த, ஆசிரியர் இல்லாத காலிப்பணியிடங்களை சமர்ப்பிக்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. இதன்படி, கோவை மாவட்டத்தில், 73 ஆசிரியர் இல்லாத காலிப்பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது ஆசிரியர், மாணவர் விகிதம் கணக்கிட்டு, உபரியாக இருப்போர் பட்டியல் திரட்ட, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''ஆசிரியர், மாணவர் விகிதம் கணக்கிடும் பணிகள் நடக்கின்றன.

பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடும் பணிகள், முடிவடையும் தருவாயில் உள்ளது. முதுகலை ஆசிரியர் விகிதாச்சாரம் கணக்கிட்டு, விரைவில் இயக்குனரகத்திற்கு பட்டியல் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

1 comment:

  1. Extra irrukka teachers ellaraiyum thookki forest panchayat bsnl EB police departmentla podunga

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot