ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 19 December 2018

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புதொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற, ஜனவரி 31 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேசிய ஆசிரியர் சேமநல நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இதற்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு தேர்வு செய்திருப்பதோடு, 'அரியர்' இல்லாமல் இருப்பது அவசியம். ஆண்டு வருமானம், ஏழு லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாதவர்கள், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்வரும் ஜன. 31ம் தேதிக்குள், அனைத்து ஆவணங்களும்இணைத்து விண்ணப்பிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட அறிக்கை:

கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், குறைந்தபட்சம், 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்ஆண்டு வருமான சான்றிதழ், மாத ஊதிய சான்றிதழ் இணைத்து, தமிழில் தெளிவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு நேரிலோ, பதிவு அஞ்சலாகவோ விண்ணப்பிக்கலாம். இத்திட்டம், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விபத்தில் இறந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும்ஆவணங்கள் முறையாக இல்லாவிடில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot