பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 2 January 2019

பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை


 அனைவருக்கும் காலை வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் வாழ்தது கூறினார் ஆளுநர்

எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று புத்தாண்டு செய்தி கூறினார் ஆளுநர்

ஆளுநர் தமிழில் பேசிய போது கைதட்டி எம்.எல்.ஏக்கள் வரவேற்பு

ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000  ரூபாய் வழங்கப்படவுள்ளது

ஆளுநர் உரையை தொடங்கிய சமயத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

கோரிக்கையை பிறகு கூறுமாறு மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் வேண்டுகோள்

வெள்ள நிவாரணமாக மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது - மு.க.ஸ்டாலின்

நிவாரண விவகாரம் தொடர்பாக பிறகு விவாதிக்குமாறு ஸ்டாலினுக்கு ஆளுநர் வேண்டுகோள்

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு

கஜா புயலுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு

தமிழக அரசு பொருளாதார ரீதியில் வளமான ஒரு மாநிலம்


ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கு தமிழக அரசு வெற்றிகரமாக மாறியுள்ளது

ஜி.எஸ்.டி அமலான பிறகு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது

மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவில் தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்

அணை பாதுகாப்பு சட்ட முன்வடிவை திரும்ப பெற தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது

சட்ட முன்வடிவுகள் பலவற்றில் தமிழக அரசின் கருத்துகளை மத்திய அரசு ஏற்க முன்வர வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு விரைவில் மேல்முறையீடு

சென்னை உவர்நீர் மீன் வளர்ப்பு மையத்தை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சிக்கான நிறுவனம் மூட வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும்

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், உதகை உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மூடும் முடிவையும் கைவிட வேண்டும்

பொங்கல் பரிசாக திருவாரூர் தவிர அனைத்து மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும்

கோவை மைய அச்சகத்தை மூட வேண்டும் என்ற முடிவையும் கைவிட்டு, தொடர்ந்து நடத்த வேண்டும்

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்கும் என எதிர்பார்ப்பு

கஜா புயல் உயிரிழப்பை ஏற்படுத்தியதோடு, பயிர்கள், வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

தென்னை மரங்கள் உள்பட பிற மரங்களையும் அடியோடு வீழ்த்தி, மின் விநியோகக் கட்டமைப்பையும்

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot