‘மொபைல் ஆப்’ வாயிலாக மாணவர்கள் வருகை பதிவு: 30வது இடத்தில் இந்த மாவட்டமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 7 January 2019

‘மொபைல் ஆப்’ வாயிலாக மாணவர்கள் வருகை பதிவு: 30வது இடத்தில் இந்த மாவட்டமா?

மொபைல் ஆப்’ வாயிலாக மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்த திட்டத்தில்
குமரி மாவட்டம் 30வது இடத்தில் உள்ளது.
அரசு பள்ளிகளில், மாணவர்களின் வருகைப்பதிவை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய கல்வித்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக செல்போன் ஆப் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை  பயன்படுத்திய மாணவர்களின் வருகைப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுப்பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்-ல் ஒவ்வொரு பள்ளியிலும் பயிலுகின்ற மாணவர்கள் அனைவரின் பெயரும் இடம்பெற்றிருக்கும். பள்ளிக்கு தினசரி வருகை தராத மாணவர்களின் பெயர்கள் அருகே குறியிட வேண்டும். இதர மாணவர் வருகை குறியிடாமல் பதிவாகிவிடும் என்பது இதன் சிறப்பு ஆகும்.

அனைத்து பள்ளிகளிலும் தவறாமல், வருகை பதிவு ஆப்-ஐ முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்துவதை, அந்தந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமின்றி, கல்வித்துறை அதிகாரிகளும்

தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை போன்று ஆப் வாயிலாக மாணவர்கள் வருகை பதிவு செய்யப்படுகின்ற பணிகளை கண்காணிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் போன்றோருக்கும் அதற்கான வசதிகள் இந்த ஆப்-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 இதற்கான பாஸ்வேர்டு வசதிகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் தமிழக அளவில் மொபைல் ஆப் வாயிலாக மாணவர்களின் வருகை பதிவு பணிகள் தொடர்பாக ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழக அளவில் 65.59 சதவீத பள்ளிகள் மொபைல் ஆப் வாயிலாக மாணவர் வருகை பதிவு மேற்கொண்டது தெரியவந்தது.

ஆனால் குமரி மாவட்டத்தில் 39.34 சதவீத பள்ளிகளே மொபைல் ஆப் வாயிலாக மாணவர் வருகை பதிவு மேற்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் 37 ஆயிரத்து 456 பள்ளிகளில் 12 ஆயிரத்து 889 பள்ளிகள்

மொபைல் ஆப் பயன்படுத்தவில்லை. 24,567 பள்ளிகள் மொபைல் ஆப் பயன்படுத்தியது தெரியவந்தது. அதே வேளையில் குமரி மாவட்டத்தில் 516 அரசு பள்ளிகளில் 203 பள்ளிகள் மொபைல் ஆப் பயன்படுத்தி மாணவர்களின்

வருகையை பதிவு செய்தன. 313 பள்ளிகள் வருகை பதிவு மொபைல் வாயிலாக மேற்கொள்ளவில்லை. இதன் வாயிலாக குமரி மாவட்டம் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 30வது இடத்தில் உள்ளது. 1006 பள்ளிகள் கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் 951 பள்ளிகள் ஆப் பயன்படுத்தியதின் வாயிலாக 94.53 சதவீத பள்ளிகள் வருகை பதிவு ஆப் மூலம் மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot