பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 11 January 2019

பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு உடனடியாக அமலாகிறது : தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்

அரசு, அரசுதவி பெறும் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவை ‘பயோ மெட்ரிக்’ முறையில் உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக இக்கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரு நடவடிக்கையாக கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதற்காக வருகை பதிவை ‘பயோமெட்ரிக்’ முறையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளுக்கும் கல்வித்துறை அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த கருவி மற்றும் ஆப் வழங்கும்  பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு 672 பயோ மெட்ரிக் கருவிகள் முதற்கட்டமாக தரப்பட்டுள்ளன. இதனை பள்ளிகளுக்கு வழங்கி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பாளை ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா இக்கருவியை பள்ளிகளுக்கும் கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும் வழங்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: கல்வித்துறையின் அனைத்து அலுவலர்கள், மற்றும் அரசு, அரசுதவி பெறும் பள்ளிகளில் அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் இனி ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

காலை மற்றும் பிற்பகல் இரண்டு முறை இதில் வருகை பதிவு மேற்கொள்ள  வேண்டும். பிங்கர் பதிவு  செய்வதில் சிக்கல் இருப்பவர்கள் கண் கருவிழி பதிவை செய்ய வசதி உள்ளது. ஆதார் எண், செல் நம்பர் இதில் இணைக்கப்பட்டிருக்கும். வருகை பதிவு முறையை உடனடியாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த கருவியை அமைப்பது மற்றும் பராமரிப்பது குறித்து வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு வருகை பதிவு முறையை பின்பற்ற வேண்டும். ஜனவரி 2ம் வாரத்தில் இது முழுமையாக அமலுக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவு மாநில அளவில் கண்காணிக்கப்படும். எனவே இந்தமுறையை மட்டுமே கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ப பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர வேண்டும் என்றார். அரசு, அரசுதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி முதன்மை கல்வி அலுவலகம், கல்வி மாவட்ட அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்திட்ட அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் இது அமலுக்கு வருகிறது.

5 comments:

  1. டிமிக்கி நாட்டாமைகளுக்கு அரசு வழங்கும் அன்பு பரிசு..

    ReplyDelete
  2. அனைத்து தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கும் விரைந்து அமல்படுத்தவும்.இந்த ஒரு செயலையாவது இந்த அரசு உருப்படியாக செய்யும்??

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் செல்வது இல்லை என டிவி விவாதங்களில் பேச முடியாது.ஏதோ ஒரு சில துரைகள்,மைனர்கள் செய்யும் ஏமாற்று வேலையால் ஆசிரியர் இனமே அவமானப்படுவது தடுக்கப்படும்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot