தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 20 January 2019

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்!

தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி. வகுப்புக்கு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமாரசாமிபேட்டை, 4வது வார்டு சாலை விநாயகர் கோவில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் என 9 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 10 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி (ஜக்கம்பட்டி ), நாகனூர், மற்றும் வெள்ளமண்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 14 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பாலக்கோடு ஒன்றியத்தில் சிங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்என 4 பள்ளிகளிலும், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகணம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 11 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவல்லி, கொங்கரப்பட்டி,தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும்ராணிமூக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 10 பள்ளிகள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிப்பட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி, மற்றும் அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 12 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 2 என தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. ஒரு ஆசிரியர் கூட இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.... இப்பபோய் LKG PreKG openபண்டிணா யார் இந்த பள்ளியில் படிக்கும் நிலை ஏற்படும் வழக்கம் போல் சோத்துக்கு இல்லாமல் இருக்கும் ஏழை மக்கள் தான்... இல்லை என்றால் அந்த விழாவில் கலந்து கொண்டு வந்தவர்கள் அல்லது திறந்து வைத்தாரே அவருடைய பேர குழந்தைகளை சேர்ப்பாரா மாட்டார்கள் ஏனா பணம் இருக்கிறவனுக்கு தனியார் பள்ளி என்றும் பரதேசிக்கு ஒரு பள்ளி என்று மாறிவிட்டது.... பள்ளி கல்வி மற்றும் பல இடங்களில் இருந்து அரசியல் கட்சிகள் உழலும் செய்து கொண்டு வரானுக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு நாய்கள் குடும்பம் குழந்தைகள் எல்லாம் நாசமாபோவானுக....

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot