உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கையாள பயிற்சி! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 8 January 2019

உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கையாள பயிற்சி!




புதுக்கோட்டை,ஜன.8: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு,அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக்  வருகைப்பதிவேடு முறைமை அமுல்படுத்துதல் சார்பான பயிற்சி அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.


இப்பயிற்சியில் ஒரு பள்ளிக்கு 2 உபகரணம் வீதம் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள 216 பள்ளிகளுக்கு 432 உபகரணங்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.

இப்பயிற்சியில் புதுக்கோட்டை,இலுப்பூர்,அறந்தாங்கி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைஆசிரியர்கள் மற்றும் கணினி இயக்கத் தெரிந்த  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியானது ஒவ்வோர் கல்வி மாவட்டத்திற்கும் தனித் தனியே நடைபெற்றது.பயிற்சியின் கருத்தாளர்களாக  மாநில அளவில் பயிற்சி பெற்ற கணினி ஆசிரியர்கள் இலுப்பூர் கல்வி மாவட்டத்தைச்  சேர்ந்த சக்திவேல்,செந்தில்,கார்த்திகேயனும்,அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்,செல்வம்,கார்த்திகேயன்,சுரேஷ்,களப்பையா ஆகியோரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்,மகேஷ்வரன்,ஜீவானந்தம் ஆகியோரும் செயல்பட்டனர்.

1 comment:

  1. படித்தவர்கள்,படிக்காதவர்கள், பணம் இருப்பவர்கள், பணம் இல்லாதவர்கள், அரசாங்க வேலையில்இருப்பவர்கள், அரசாங்க வேலைஇல்லாதவர்கள்,தனியார் துரையில் பணிபுரியும் அனைவருமே அரசாங்க பள்ளியில் சேர்ப்பதிலலை காரணம் சிறந்த முறையில் கல்வி இல்லை..... ஏன்... ஓன்று முதல் ஐந்து வரை படிக்கும் இருபது அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கும் ஓரே ஆசிரியர்...... இதனை கவனிக்க வேண்டிய அரசு தலைமை ஆசிரியர்களை கவனம் செலுத்தி வருகின்றனர்.... சிஸ்டத்தில் பல முறைகேடு ........பள்ளிகளை ஓன்றினைத்து வட்டத்துக்கு ஓருபள்ளி,மாவட்டத்திற்கு ஓருபள்ளி, மாநிலத்திற்கு ஓருபள்ளி என நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது...... எப்பதான் இதல்லாம் ஓரு முடிவுக்கு வருமோ சாமியோ ......முடிலப்பா ஐய்யப்பா.....

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot