வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடுகள் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 22 January 2019

வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடுகள் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய ஆசிரியர்கள், சிறந்த கல்வியை தரக்கூடிய ஆசிரியர்கள் பள்ளி பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். ஆசிரியர்கள் இதை மனதில் கொண்டு பணிகளை ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பொதுத்தேர்வு வரும் நேரத்தில் இதுபோன்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு துறை சார்பாக அறிவுரையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறோம்.

வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடுகள் குறித்து முதல்வரோடு கலந்து பேசி அறிவிப்போம். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மனிதநேயத்தோடு வேலைநிறுத்தத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது `டெஸ்மா’ சட்டம் பாயுமா? என்று கேட்கிறீர்கள். இது சிக்கலான கேள்வி. இப்போதுதான் போராட்டம் தொடங்கி இருக்கிறது. போராட்டம் தொடருமா, முடியுமா? என்று தெரியவில்லை. 2 நாட்கள் கழித்து இந்த கேள்விகளை கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

7 comments:

  1. அவுங்க ஏன் போராட வேண்டிய நிலமைய கொண்டு வந்திங்க அமைச்சரே... (அவுங்க கேக்குற கோரிக்கை புரியலயா .... அமைச்சரே)

    ReplyDelete
  2. மாற்று ஏற்பாடாக பள்ளியை மூடலாம்

    ReplyDelete
  3. மாற்று ஏற்பாடாக VRS கூட வாங்கலாமே. வேணும்னா உங்க வீட்டை பூட்டுங்க

    ReplyDelete
  4. ஏன் உங்களுக்கு வீடு இல்லையா?

    ReplyDelete
  5. B. Ed படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளை, கூடுதல் பயிற்சி என்ற பெயி்ரில் தற்காலிகமாக பள்ளிக்கு அனுப்பலாம்

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot