2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 2 February 2019

2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

இந்த மாதம் செலுத்த போகும்

**************************

வருமான வரித்தகவல்கள்

2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:


📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். *[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]*

📘நிலையான கழிவு *(Standard deduction) ரு.40,000/-* ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan பிடித்தம் செய்பவர்கள்*HRA கழிக்கக் கூடாது.*

📘மாற்றுத்திறன் ஆசிரியர்கள் *தொழில்வரி செலுத்தத் தேவையில்லை.* மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை*Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.*மேலும் *80U படி - 75,000/-* (40%க்கு மேல்)*1,25,000/-* (80%க்கு மேல்) அரசு மருத்துவரின் மருத்துவ சான்றின் அடிப்படையில் கழித்துக் கொள்ளளாம்.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக*Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்*.

📘housing loan - அசல் தொகையை  *80c ல் கழித்துக் கொள்ளலாம்.*

📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c படிவம் வைக்க வேண்டும்.*

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய *CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.*

📘School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*

📘LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. *(LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).*

📘80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்*10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று* பெற்று இணைக்க வேண்டும்.

📘மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்*NHIS தொகையை 80D* ல் கழித்துக் கொள்ளலாம்.

📘கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய *வட்டியை முழுவதும் 80E* ல் கழித்துக் கொள்ளலாம்.

📘நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல்*நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G* ல் கழித்துக் கொள்ளலாம்.

📘வரி விபரம்....2,50,000 வரை - இல்லை2,50,001 - 5,00,000 : 5%5,00,001 - 10,00,000 : 20%10,00,001 - மேல்       : 30%

📘வருமான வரியில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம்* செய்ய வேண்டும்.

📘Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில்*ரூ.2500/-  ஐ 87A ல்* கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ளரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10க்கு முழுமையாக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot