தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள்; 6,029 அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்:பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 19 June 2017

தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள்; 6,029 அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்:பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.437 கோடியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த கல்வி ஆண்டில் 7 அரசு கல்லூரிகள் உட்பட புதிதாக 10கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

தமிழகத்தில் 3 ஆயிரத்து 90 அரசு உயர்நிலைப் பள்ளிகளில்தலா 10 கணினிகள், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகள் மற்றும் அத னுடன் தொடர்புடைய இதர சாதனங் களுடன் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.437 கோடியில் அமைக்கப்படும்.3 ஆயிரம் தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் தலா ஒரு அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடியில் அமைக்கப்படும்.

பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். அதற்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் என பெயரிடப்படும். சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.39 கோடியே ஒரு லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.தமிழகத்தில் 43 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், மாநாட்டு அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி கள் ரூ.210 கோடியில் 2 ஆண்டு களில் ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டு ரூ.105 கோடியில் இப்பணி கள் மேற்கொள்ளப்படும்.

 பல் வேறு மாவட்டங்களில் 7 புதியஅரசு கலை, அறிவியல் கல்லூரி கள், 3 பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ.100 கோடியே 31 லட்சத்தில் இந்தக் கல்வி ஆண்டில் தொடங்கப் படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டில் 268 புதியபாடப்பிரிவுகள் தொடங்கப்படும். இதற்காக 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்ட விளை யாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆவதால் அங்குள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூ.15 கோடியில் நவீன தரத்துடன் புதிய விளை யாட்டு வளாகம் கட்டப்படும்.

 திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் கட்டப்படும்.காஞ்சிபுரம் மாவட்டம் மேலக் கோட்டையூரில் தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகே கெனாயிங், கயாக்கிங் என்ற நீர் விளையாட்டுகளுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூ.4 கோடியே 60 லட்சத்தில் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் கே.பழனி சாமி அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot