ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் -பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 2 June 2017

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் -பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்.

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் ஆணை வழங்க பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தர விட்டுள்ளார். அதன்படி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்கள்), உடற்கல்வி இயக்குநர்(கிரேடு-2) ஆகியோருக்கு மே 31, ஜூன் 1 ஆகிய நாட்களில் ஆன்லைனில் வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதன்மூலம் 1,323 ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்தாங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot