தமிழக சட்டப்பேரவை ஜூன் 14-ம் தேதி கூடுகிறது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 4 June 2017

தமிழக சட்டப்பேரவை ஜூன் 14-ம் தேதி கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை ஜூன்14-ம் தேதி கூடும் என சட்டப்பேரவை பொறுப்புச் செயலர் பூபதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
ஜூன் 14-ம் தேதி காலை 10 மணியளவில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி தாக்கலாக வாய்ப்பு:

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 30 முதல் 35 நாட்கள் வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 14-ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.மேலும், இந்தக் கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot