ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி:கல்வி திட்டத்தில் 41 திட்டங்கள் முதலமைச்சர் ஒப்புதலோடு அறிவிக்கப்படும்.
மாணவர்கள் எதிர்கால தேர்வை சந்திக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்படும். பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த குழுவில் 4 பேர் தான் இருந்தனர். இனி அந்த குழுவில் விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ஆசிரியர் பணி இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளதாக போடப்பட்ட வழக்கு தேவையில்லாதது. முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நபர் தற்போது அந்த பதவியில் இருக்கிறாரா?முறைகேடு நடந்ததை நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இல்லையென்றால் புகார் கூறியவர் தன்னுடையை பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. கல்வித்துறையில் தில்லுமுல்லுக்கு இடமில்லை.மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அதற்கான புத்தகங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளிகளில் வரும் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மாணவர்கள் வரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுவதால்தான் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment