ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 14 June 2017

ஒரே நேரத்தில் மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெற முடியாது: ஒழுங்கு முறை ஆணையத் தலைவர்களுக்கு அரசு அறிவிப்பு.

பல்வேறு ஒழுங்கு முறை ஆணையங்களில் பணியாற்றும் தலைவர்கள், உறுப்பினர்கள், ஒரே நேரத்தில் மாத ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும் பெற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவர்கள் மாத ஊதியம், ஓய்வூதியம் ஆகிய இரண்டையும் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய, மாநில அரசின் துறைகளில் பணியாற்றும் ஒருவர், ஏதேனும் ஓர் ஒழுங்குமுறை அமைப்பின் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ நியமிக்கப்பட்டால், அவர் நியமிக்கப்படும் நாளன்றே ஏற்கெனவே ஆற்றிவந்த பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இவ்வாறு ஓய்வு பெறும் ஒருவர், ஒழுங்கு முறை ஆணையத்தின் முழுநேர ஊழியராக மீண்டும் பணியில் சேரும்போது, அவர் ஏற்கெனவே வகித்து வந்த பதவிக்கு ஓய்வூதியத்தையும், புதிதாக ஏற்றுள்ள பொறுப்புக்கு மாத ஊதியத்தையும் ஒரே நேரத்தில் பெறுகிறார். இந்த நிலையில், அரசின் புதிய உத்தரவுப்படி, அவருடைய ஓய்வூதியத் தொகை கழிக்கப்பட்ட பிறகு மாத ஊதியம் வழங்கப்படும். இதனால், அவருடைய மாத ஊதியம் குறையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பிறகு அரசின் பல்வேறு ஒழுங்குமுறை ஆணையங்களின் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள், அரசின் ஊதியங்களில் இருந்து பிரிக்கப்பட்டு விட்டன.

அதன்படி, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்), காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏ), மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் (சிஇஆர்சி), இந்தியப் பங்குகள், பரிவர்த்தனை வாரியம் (செபி), ரயில்வே வளர்ச்சி ஆணையம் (ஆர்டிஏ), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பிஎன்ஜிஆர்பி) உள்ளிட்ட அமைப்புகள் அரசின் ஊதியங்களில் இருந்து பிரிக்கப்பட்டு விட்டன. ஒழுங்குமுறை ஆணய உறுப்பினர்களின் ஊதியத்தை, மத்திய அரசின் செலவினங்கள் துறை கவனித்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot