தரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 27 July 2017

தரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'

தரம் உயர்த்தப்பட்ட, 250 பள்ளிகளில் பணியிடம் பெற, ஆசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முகாமிட்ட வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தில், 150 ஊராட்சி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் சேர, ஆசிரியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பள்ளிகளில், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர் என, 1,900 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில், விரும்பிய பள்ளிகளில் இடம் பெற, அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள் அலுவலகங்களை, ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் முகாமிட்ட வண்ணம் உள்ளனர். புதிய பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் பட்டியல், இறுதி செய்யப்பட்டு வருகிறது; விரைவில் வெளியாகும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot