சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 23 July 2017

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாகபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஊழியர்கள் தவிர அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசு முயன்று வருகின்றது.இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்16549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு மாதம் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.பிறகு இரண்டு ஆண்டுகள் முடிந்து தொகுப்பூதியம் ரூ.2000/- உயர்த்தி 2014ம் ஆண்டு முதல் ரூ.7000/-ஆக சம்பளம் தரப்படுகிறது. ஆண்டு வாரியாக ஊதிய உயர்வை அரசிடம் இருந்து கேட்டு வாங்க முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நடந்து முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15000/- தொகுப்பூதியம், அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலை தரவேண்டி கேட்டதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.700/- உயர்த்தி தொகுப்பூதியம் ரூ.7700/-வழங்கிவருவதாக பதிலளித்துள்ளார். ஆனால் ஊதிய உயர்வுக்கான அரசாணை எதுவும் இதுவரை அரசு வெளியிடவில்லை. சமவேலை, சமஊதியம் என்ற சமநீதியை அரசு அமுல் செய்தால் ஒழிய, ஒப்பந்தப் பணி செய்பவர்களின் வாழ்வு ஒருபோதும் முன்னேறாது.அது போல ஒப்பந்த பணி செய்பவர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச சம்பளம், மருத்துவ வசதி, குடும்பநலநிதி, இன்சூரன்ஸ் வழங்க அரசு முன்வரவேண்டும்.

ஒப்பந்த பணிசெய்பவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன் வழங்கவேண்டும். 58வயது முடிந்து பணிஓய்வில் சென்றவர்களுக்கும், பணியில் சேர்ந்து இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கும், அரசு மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சமாக ரூ.3 இலட்சம் உடினடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot