இலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 29 August 2017

இலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்பு

தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளியை திறக்கக்கோரிய வழக்கில் செப்டம்பர் 4ல் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டம் 1986ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.


  படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தமிழ்நாடு தவிர எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக் கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த பள்ளிகளை அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த பள்ளிகளில் ஹிந்தி ஒருபாடமாக பயிற்றுவிக்கப்படுவதால் தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜெயகுமார்தாமஸ் என்பவரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று நடந்த விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்தார்.
அதேசமயம் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பித்தால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றார். இதையடுத்து, நவோதயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பிக்க முடியுமா என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வரும் செப்ம்பர் 4ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஹைகோர்ட் மதுரை கிளை அறிவித்துள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot