சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 11ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம்மற்றும் ஓமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.
இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 11ல் துவங்குகிறது.இது குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 11 - 14 வரை நடக்க உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் தரவரிசை பட்டியலில், 201 வரை இடம் பெற்றவர்கள் பங்கேற்பர். மேலும், அழைப்பு கடிதத்தை, இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.