வாய்ப்புகளின் வாசலை திறக்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள்: இனி அச்சம் எதற்கு? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 11 May 2017

வாய்ப்புகளின் வாசலை திறக்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள்: இனி அச்சம் எதற்கு?

பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதில்பிளஸ் 2 தேர்வுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்துக்கு மேல் என்ற நிலை உள்ளபோதும், கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமலும் இருந்துவிடுகிறார்கள்.
முன்பெல்லாம் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஓராண்டை இழக்க வேண்டியிருந்தது.ஆனால், இப்போதெல்லாம் அந்த நிலை இல்லை. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்துகிறார்கள். அந்த தேர்வெழுதி தேர்ச்சி பெற்று அந்தகல்வி ஆண்டிலேயே மேற்படிப்பை தொடர்ந்துவிடலாம்.

 இத்தகைய மாணவர்களுக்காக கல்லூரிகளில் இடங்களையும் தனியே ஒதுக்கிவைத்திருப்பார்கள்.பொறியியல் படிப்பை பொருத்தவரையில், அவர்களுக்காக தனியாகதுணை கலந்தாய்வே நடத்தப்படுகிறது. எனவே, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீட்டுக் கும் விண்ணப்பிக்கவும் தற்போது வாய்ப்புகள் உள்ளன. தேர்வில் தோல்வி அடைந்தாலும், குறைந்த மதிப் பெண் பெற்றாலும் வாழ்க்கை முடிந்து போனது என்று எந்த மாணவரும் கவலைகொள்ளத் தேவையில்லை.இன்று பல்வேறு துறை களிலும் ஜாம்பவான்களாக திகழும் சாதனையாளர்களில் பெரும் பாலானோர் படிப்பில் சுமாராக இருந்தவர்கள்தான் என்பதை அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி அல்ல. புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதும், வாழ்க்கையை தைரியத் தோடும் தன்னம்பிக்கையோடும் எதிர் கொள்வதும்தான் உண்மையான கல்வி. நம்மை மகிழ்ச்சி அடையச் செய்வதே கல்வி.

கடந்த பல ஆண்டுகளாகவே பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் குறிப்பாக அவர்களது பெற்றோர்களின் கவனம் எல்லாம் பொறியியல் படிப்பு மீதே இருக்கிறது. வேறுசிலர் மருத்துவப் படிப்பு மீது பார்வையை பதிக்கிறார்கள். எல்லோரும் பொறியியலில் சேருகிறார்கள் என்பதற்காக நீங்களும் அப்படிப்பை தேர்வு செய்யாதீர்கள். உங்களுக்கு பொறியியல் படிப்பதில் விருப்பம் என்றால் தாராளமாக சேரலாம். தொழிற்கல்வி படிப்புகளை தாண்டி கலை அறிவியல் பாடங்களில் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அண்மைக்காலமாக கலை அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் பார்வை திரும்பத் தொடங்கியுள்ளது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் எவ்வளவு வாய்ப்புகளோ இன்னும் சொல்லப்போனால் அதைவிட வும் மேலாகவே வாய்ப்புகள் உள்ளன.எதிர்காலத்தில் என்னென்ன படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதை துறை நிபுணர்களுடன் கேட்டு தெரிந்துகொள்ளலாம். ஆழ்ந்து யோசித்து தேர்வு செய்த படிப்பை ஆர்வத்தோடும், முழு ஈடுபாட்டோடும் படித்தால் யார் வேண்டுமானாலும் உறுதியாகசாதிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot