கர்நாடகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான கல்வி இல்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது.
தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க மாநில அரசைக் காட்டிலும் மத்திய அரசுப் பள்ளிகளை நாடும் போக்கு பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆரம்பப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, உயர்கல்வி உள்ளிட்டவற்றிலும் அரசு கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் தனியார் கல்வி நிறுவனங்களை விரும்பும் போக்கு உள்ளது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட ஒருசில அரசு கல்வி நிறுவனங்கள் இதில் விதிவிலக்காக மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. மாநில அரசின் துறைகள், நிறுவனங்களில் வேலை தேடி அலையும் மக்கள், அரசு கல்வி நிறுவனங்களை விரும்பாமல் தனியார் கல்வி நிறுவனங்களை நாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
ஆனால், அரசு வேலையை பெற்றுக் கொண்டு மக்கள் வரிப் பணத்தை ஊதியமாகப் பெறுபவர்கள் தங்கள் குழந்தைகளை, மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்க வைக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கும் போக்கு உள்ளது.
கல்விச் செலவினங்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ஊழிய உயர்வு கேட்டு போராடுவதும் அதிகரித்து வருகிறது. ஊதிய உயர்வை பெற்றுக் கொண்டு அந்த பணத்தை தனியார் கல்வி நிறுவனங்களில் கொட்டி கொடுப்பதால், மறைமுகமாக மக்கள் வரிப்பணம் மடைமாற்றப்படுவதை உணரலாம்.
இதன்காரணமாக அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் அரசு ஊழியர்கள் கவனம் செலுத்துவதில்லை. இந்த போக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியரல்லா ஊழியர்களிடமும் காணப்படுகிறது.
தங்கள் குழந்தைகள் யாரும் படிக்காததால், தரமான கல்வியை வழங்கவும், சீரான உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதரவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வுகாண திட்டமிட்டுள்ள மாநில அரசு, அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்க வைக்க வகைசெய்யும் சட்டத்தை கொண்டுவர யோசித்து வருகிறது.
கர்நாடகத்தில் மொத்தம் 1,36,997 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் மட்டும் 92,861 ஆகும். அனைத்து வகையான பள்ளிகளிலும் மொத்தம் 1,01,14,286 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் 47,45,846 பேர்.
அப்படியானால், மாநிலம் முழுவதுமுள்ள 92,861 பள்ளிகளில் 47,45,846 மாணவர்கள் படிக்கிறார்கள். இது 46.92 சதவீதமாகும். இதே வகையான ஒப்பீட்டில், 44,136 தனியார் பள்ளிகளில் 53,68,440 மாணவர்கள் படிக்கிறார்கள். இது 53.07 சதவீதமாகும்.
கர்நாடக அரசின் வெவ்வேறு துறைகள், நிறுவனங்களில் மொத்தம் 28,43,420 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் 10 சத ஊழியர்கள் மட்டும் பணியிடங்களில் தனியார் பள்ளிகள் இல்லாத காரணத்தால் கட்டாயத்தின் பேரில் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார்கள். அதாவது, ஏறத்தாழ 25 லட்சம் ஊழியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இதனால் மக்கள் வரிப்பணம் வேறு வழியில் தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணமாகச் செல்கிறது. எனவே, கர்நாடக அரசின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்கள் குழந்தைகளை மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தன்வீர்சேட் உறுதி செய்திருக்கிறார். அண்மையில் அவர் சட்டப்பேரவையில் பேசியபோது, அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயமாக அரசு பள்ளியில் சேர்க்க வகைசெய்ய தனியார் சட்ட மசோதாவை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முனைந்தால், அதை ஆளுங்கட்சி மனப்பூர்வமாக ஆதரிக்கும்.
நமது நாட்டில் உள்ள பல சட்டப்பேரவைகள் இதுபோன்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எல்லோருக்கும் அரசு வேலை தேவைப்படுகிறது. ஆனால், அரசு கல்வி நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகிறது.
இந்த நிலையைமாற்ற வேண்டும். அதற்காகவே அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment