உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் இருந்த நீட்தேர்வு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே 7-ம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வுகள் ஒரே வினாத்தாளின் அடிப்படையில் நடைபெறாததால், அத்தேர்வை ரத்து செய்து, ஒரேவினாத்தாளின் அடிப்படையில் நடத்த உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும் மதுரையைச் சேர்ந்த சந்தியா உள்ளிட்ட 9 பேரும், திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவரும் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மே 24ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள நீட் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீட் வழக்குகளோடு அவற்றை பட்டியலிடவும் உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment