திருவண்ணாமலை, ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்புவகுப்பு நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது; இது குறித்த புதிய அறிவிப்பை, நாளை, அரசு வெளியிட உள்ளது,'' பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருவண்ணாமலையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதில், நேற்று காலை, புகைப்பட கண்காட்சி நடந்தது.இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:தமிழகத்தில்,1.20 கோடி, பள்ளி மாணவ, மாணவியர் பயனடையும் விதத்தில், இந்த ஆண்டு, 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் அனைவரையும் பாதுகாத்திடும் வகையில், மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், எந்த பொதுத் தேர்வையும் சந்திக்கும் வகையில், 54 ஆயிரம் கேள்வி, விடைகள் மற்றும் வரைபடம் அடங்கிய கையேட்டை வெளியிட உள்ளோம்.
மேலும், மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கி, ஊக்குவித்திட பள்ளி விடுமுறை நாளான, சனிக்கிழமையன்று, 450 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்த புதிய அறிவிப்பை, அரசு, நாளை வெளியிட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment