'அனைத்து பள்ளிகளிலும், சிறப்பு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம், தனியாக பயிற்சி அளிக்க வேண்டும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சட்டம் - 1995, இதை வலியுறுத்துகிறது. ஆனால் தற்போது, வழக்கமான பாடங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளே நடத்தப்படுகின்றன.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு பயிற்சியாளர்களை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். அங்கீகாரம் பெறும் போது, பள்ளிகளுக்கு இந்த நிபந்தனைகள் வி திக்கப்பட்டுள்ளன. ஆனால், பல பள்ளிகளில், சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளர்கள் இல்லாதது தெரிய வந்துள்ளது. உடனே நியமிக்காவிட்டால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment