கணினி ஆசியர்கள் கவனத்திற்கு .. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 31 July 2017

கணினி ஆசியர்கள் கவனத்திற்கு ..

அன்புள்ள கணினி ஆசிரியர்களே..‼

தமிழக அரசு, 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் (Exam / Seniority) வெளியிடவில்லை என்பதை முதலில் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளவும்...


இப்படி இருக்கும் பட்சத்தில், இதில்  765 Computer Instructor பணியிடங்களுக்கு தேர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம் என்று பலர் ஏமாற்றுகின்றனர்.

ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் .பட்டதாரி ஆசிரியர் (BT Asst.)என்ற முறையில்   நிரப்பப்படும் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது...
மேலும் அதற்கக்கான படத்திட்டத்தை அவர்களே வடிவமைத்து ஏமாற்றுகின்றன.
இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள *Syllabus* அனைத்தும் *NET / SLET* தேர்வுகளின் பாடத்திட்டம் என்பதை நன்றாக கவனியுங்கள்....
மேலும், இதற்கு கட்டணத்தொகையாக ₹. 3500லிருந்து 15000 வரை வசூல் செய்கின்றனர்*

*இந்த பதிவு, கணினி ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே அமைந்துள்ளது...
இது எப்படி இருக்கிறது தெரியுமா??   யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனக்கு தேவை பணம்.. என்ற கூற்றினை உதாரணம் காட்டுகிறது.
*வீண் வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். தமிழக கல்வி வரலாற்றில் பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு இதுவரை அரசு பள்ளிகளில் எந்தவொரு நிரந்தர பணிவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ‼ 

*நமது தொடர் முயற்சியினால் தற்போது 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 765 பணியிடங்கள்
எழுத்துத்தேர்வா? (அ) பதிவுமூப்பா? என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் தமிழக அரசால் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவும்.‼ தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு தரப்பிலிருந்து தெளிவான அறிவிப்பு வந்துள்ளது...
*விரைவில், கணினி ஆசிரியர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு தரப்பிலிருந்து TRB இணையதளத்தில் வெளியிடப்படும். அதுவரை எந்தவொரு பொய்யான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் .

* அரசு சார்ந்த தெளிவான அறிவிப்புகளுக்கு தினமும் *TRB இணையதளத்தை காணவும்.* சிலர் தங்களுடைய *சுய லாபத்திற்காக தேர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம் என்று கூறி வருகின்றனர்.அரசு தரப்பிலிருந்து எந்தவொரு தெளிவான அறிவிப்புகளும் இன்னும் வராத பட்சத்தில் இது எப்படி சாத்தியமாகும்.
முறையான அரசாணை வரும் வரை தேவையில்லா வதந்திகளை நம்ப வேண்டாம்.எந்த
அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தே TRB வலைதளத்திலிருந்தே வரும் வரை காத்திருக்காவும்.

நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்..‼

இவண்
திரு ச.கார்த்திக்,
மாநிலப் பொருளாளர் ,
9789180422,
செய்தி:திரு கு. ராஜ்குமார், MCA., BEd.,
இணைய இணை-ஆசிரியர்.
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண் ® 655/2014

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot