கேரளாவில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தலையாய பிரச்னையாய் இருப்பது மாதவிடாய். இதனை கருத்தில் கொண்டு பல தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கதொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி ஆசிரியைகளுக்கு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது கேரள தனியார் பள்ளி சங்கம் (All Kerala Self-Financing Schools Federation).இந்த சிறப்பு விடுப்பு நேற்றைய தினமான ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இதனால் 1200 பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கு மேலான ஆசிரியைகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்த அணைத்து கேரள தனியார் பள்ளிகள்சங்க முதல்வர் ராமதாஸ், கேரள தனியார் பள்ளிகளில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள இந்த மாதவிடாய்கால விடுப்பு இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment