நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு 2 ஆண்டுகள் விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. நீட் தேர்வில் மத்திய பாடத் திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதால் மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவக் கல்வி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.
இந்நிலையில் நீட் தேர்விலிருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட நகல் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நேற்றிரவு வழங்கப்பட்டது. மனிதவளம் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கருத்து கேட்ட பிறகு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 முறை தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை மனிதவளம் மேம்பாட்டு துறையும், சுகாதாரத்துறையும் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment