அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐஏஎஸ் முதல்நிலைத்தேர்வுக்கு தமிழக அரசு மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:2018-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்த உள்ள குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு அரசு மையத்தில் இலவச பயிற்சி பெற விரும்பும் தமிழக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்த இலவசப் பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நவம்பர் 5-ல் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கவிரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி இன்று (திங்கள்) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 20. அரசு மையத்தில் ஏற்கெனவே முதல் நிலைத் தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.