பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாதிரி வினாத்தாள். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday, 20 August 2017

பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாதிரி வினாத்தாள்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப்பதிவுக்கு பொதுப்பாடங்களுக்கு அதிகபட்சம் 3 மதிப்பெண்களும், தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு உடைய பாடங்களுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
85சதவீதத்துக்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படும்.11-ம் வகுப்புக்கு நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதல் பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு வினா அமைப்பு, மாதிரி வினாத்தாள், மதிப்பீட்டு முறை ஆகியவற்றை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தமிழ், ஆங்கிலம் உட்பட 23 பாடங்களுக்கும் 13 தொழிற்கல்வி பாடங்களுக்கும் உரிய மாதிரி வினாத்தாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (திங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக கல்விச்செய்தி இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள வினாத்தாள் அமைப் பின் முக்கிய அம்சங்கள்:

மொழிப்பாடங்களில் எழுத்துத்தேர்வுக்கு 90 மதிப்பெண். அகமதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண். எழுத்துத்தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்க வேண்டும்.செய்முறைத்தேர்வு உள்ள பாடங்களில் எழுத்துத்தேர்வுக்கு 70 மதிப்பெண். அகமதிப்பீடு, செய்முறைத்தேர்வுக்கு 30 மதிப்பெண். எழுத்துத்தேர்வில் குறைந்தபட்சம் 15 மதிப்பெண் பெற வேண்டும்.

செய்முறைத்தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத்தேர்வு பாடங்களில் தேர்வுக்கு 90 மதிப்பெண். தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 25.தொழிற்கல்வி செய்முறை பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கு 75 மதிப்பெண். அகமதிப்பீட்டுக்கு 30 மதிப்பெண்.

செய்முறைத்தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண் பெற வேண்டும்.

பொதுப்பாடங்களுக்கானஅகமதிப்பீட்டுக்கு மொத்தம் 10 மதிப்பெண்.

வருகைப்பதிவுக்கு அதிகபட்சம் 3 மதிப்பெண், உள் நிலைத்தேர்வுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்.

செயல்திட்டம் (புராஜெக்ட் ஒர்க்), களப்பயணத்துக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்.

தொழிற்கல்வி செய்முறை பாடங்களுக்கான அகமதிப்பீட்டுக்கு மொத்தம் 25 மதிப்பெண்.

வருகைப்பதிவுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண், உள்நிலைத்தேர்வுகளுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெண்.

செயல்திட்டம், களப்பயணத்துக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்

வருகைப்பதிவுக்கு மதிப்பெண்பொதுப்பாடங்கள் (அதிகபட்சம் 3 மதிப்பெண்)

85 சதவீதத்துக்கும் மேல் வருகை - 3 மதிப்பெண்

80 முதல் 85 சதவீதம் வரை வருகை - 2 மதிப்பெண்

75 முதல் 80 சதவீதம் வரை வருகை - 1 மதிப்பெண்

தொழிற்கல்வி செய்முறைத்தேர்வு பாடங்கள் (அதிகபட்சம் 5 மதிப்பெண்)

85 சதவீதத்துக்கும் மேல் வருகை - 5 மதிப்பெண்

80 முதல் 85 சதவீதம் வரை வருகை - 4 மதிப்பெண்

75 முதல் 80 சதவீதம் வரை வருகை - 2 மதிப்பெண்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot