சொந்த வீடு இருக்கா விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 22 August 2017

சொந்த வீடு இருக்கா விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்

சொந்த வீடு வைத்திருந்தும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை பரிசீலித்து வருகிறது.
மாத ஊதியம் வாங்குவோரின், வருமானத்திற்கு ஏற்ப, அந்தந்தஅலுவலகத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், மாத ஊதியம் பெறுவோர், வருமான வரித்துறையின் கண்ணில் இருந்து தப்ப முடியாது.

நடவடிக்கை

ஆனால், வீடு வாடகைக்கு விடுவோர், கார், வேன் போன்ற வாகனங்களை வாடகை மூலம் வருவாய் ஈட்டுவோர் என, சொந்த வருவாய் ஈட்டுவோரில் பெரும்பாலானோர், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில்லை. அத்தகையவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு, இதுவரைவழிவகை இல்லை. ஆனால், இப்போது அதற்கான நடவடிக்கையை வருமான வரித் துறை துவங்கி உள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது:வருமான வரி செலுத்த வேண்டிய அளவுக்கு, வருவாய் ஈட்டும் பல தரப்பினரும், இன்னும், வருமான வரி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. அதனால், படிப்படியாக அனைத்து தரப்பினரையும், கண்டறியும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதில், தனியார், 'நர்சிங் ஹோம்'களும் அடக்கம்.வரி செலுத்துவதில்லை மேலும்,வீட்டு உரிமையாளர்களில் பெரும்பாலானோர், கணிசமான வாடகை வருமானம் வந்தாலும், அதற்குரிய வருமான வரி செலுத்துவதில்லை; கணக்கும் தாக்கல் செய்வதில்லை.

விரைவில், துவங்கும்

அத்தகையோரை, வரி வலைக்குள் கொண்டு வந்தால், அதிக அளவில் வருமான வரி கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில்,துவங்க உள்ளன.மேலும், புதிய சொத்துக்களை பதிவு செய்யும்போது, 'ஆதார்' எண்ணை குறிப்பிடச் சொல்வது தொடர்பாகவும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.அவ்வாறு செய்வதால், 'பினாமிகள்' மூலம், சொத்துகள் வாங்கி குவிப்பது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot