அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் என 3 வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அதையொட்டி, வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுக்கான பணிகளை கல்வித்துறை தொடங்கியுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, வழக்கமாக பொதுத்தேர்வு தொடங்க உள்ள சில மாதங்களுக்கு முன்புதான் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுத்தேர்வுக்கான கடைசி நேரத்தில் தான் சில பள்ளிகளில் இருந்து பட்டியலில் புதியதாக பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் மாணவர்களின் இறுதிகட்ட பெயர் பட்டியல் தயாரிக்க கடும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது, காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியினை கல்வித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளர்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை அந்தந்த பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர். இதில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக மாணவர்கள் பெயர் பட்டியல் பள்ளிகளில் ஆன்லைனில் தயாரிக்கப்படுகிறது. இதில் திருத்தம் ஏதேனும் இருப்பினர் அதனை முழுவதும் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.