தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை அல்ல என்ற நிலையில், அவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டு அரசு நிர்வாகத்தை முடக்க அரசு ஊழியர் சங்கங்களுக்கு உரிமையுள்ளதாக கருத இயலாது.
வேலைநிறுத்தம் அவர்களது கோரிக்கைகளுக்கு நியாயம் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை செயலிழக்கச் செய்யும்.எனவே, நடத்தை விதிகளுக்குப் புறம்பான வேலைநிறுத்தத்தில் அரசுப் பணியாளர் சங்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள் மற்றும்பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.